தினமணி 26.12.2009
மாநகரின் ஒரு பகுதியில் நாளை குடிநீர் வராது
திருச்சி, டிச. 25: பொன்மலைக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி அறிவித்துள்ளார்.
திருச்சி – சென்னை புறவழிச்சாலையில் நான்குவழிச் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், பொன்மலைக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான பிரதான உந்து குழாய்களில் கல்லுக்குழி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குச் செல்லும் பம்பிங் இடமாற்றம் செய்து ஜி கார்னர் அருகே புதிய உந்து குழாயுடன் இணைப்புக் கொடுக்கும் பணி நடைபெறவுள்ளது.
இதனால், அரியமங்கலம், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைப்பட்டி, மத்தியச் சிறை, சுப்பிரமணியபுரம், விமான நிலையப் பகுதி, செம்பட்டு, கல்லுக்குழி, காஜாநகர், காஜாமலை, கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான்நகர், அன்புநகர் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. திங்கள்கிழமை வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்படும்.