தினமணி 12.05.2010
மாவட்ட பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் பொறுப்பேற்பு
சேலம், மே 11: சேலம் மாவட்ட பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநராக (பொறுப்பு) ஜெ.சுப்பிரமணியன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பொறியாளராக இதுவரை பணியாற்றி வந்தார். இப்போது உதவி செயற் பொறியாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்று மாவட்ட பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இங்கு பணியாற்றி வந்த ஞானசேகரன், சேலம் குடிநீர் வடிகால் வாரிய கிராம குடிநீர் கோட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார்.