தினமலர் 02.06.2010
மின் மோட்டார்களை அகற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைப்பில்லை: கமிஷனர் குற்றச்சாட்டு
கம்பம்: கம்பத்தில் குடிநீர் உறிஞ்சும் மின் மோட் டார் களை பறிமுதல் செய்ய கவுன்சிலர்கள் ஒத்து ழைப்பு இல்லை, இதனாலேயே குடிநீர் பற்றாக் குறை ஏற்படுகிறது என, நகராட்சி கூட்டத்தில் கமிஷனர் அய்யப்பன் குற்றம் சாட்டினார். கம்பம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் அம்பிகா தலைமையில் நடந் தது. கமிஷனர் அய்யப்பன், நகரமைப்பு ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் முன் னிலை வகித்தார். விவாதம் வருமாறு: தவமணி: வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுங்கள். ரெடிமேட் கடைகளுக்கு வரி விதியுங்கள். கமிஷனர்: ரெடிமேட் கடைகளுக்கு கமர்சியல் அடிப்படையில் வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
டேவிட் அன்பையா : கேபிள் “டிவி‘ ஆபரேட்டர்களிடமிருந்து வரி கிடைக்கிறதா கமிஷனர்: ஒரு இணைப்பிற்கு 15 ரூபாய் என்று நிர்ணயம் செய்து, கலெக்டருக்கு தந்து அவரிடமிருந்து 25 சதவீதம் நகராட்சிக்கு தர அரசு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. முருகன்: குடிநீர் சப்ளையில் நிறைய கோளாறுகள் உள்ளது. நிர்வாக குளறுபடிகளை சரிசெய்யவேண்டும். கமிஷனர்: நிர்வாக குளறுபடி என்று கூறாதீர்கள். கம்பம் நகரில் பத் தாயிரம் மின்மோட் டார் கள் உள்ளது. அவற்றை பறிமுதல் செய்ய கவுன்சிலர்கள் ஒத்துழைக்க தயாரா? இதனால் தான் நகரில் குடிநீர் பற்றாக்குறையே ஏற்படுகிறது. அஜ்மல்கான்: மோட்டார்களை பறிமுதல் செய் வதில் கமிஷனரை தடுத் தது யார். முருகன்: சைக்கிள் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்ட் அருகில் தனியார் அமைக்க நகராட்சி அனுமதி வழங்கியுள்ளதா கமிஷனர்: அனுமதி வழங்கவில்லை. தனியார் வைத்திருப்பது தொடர் பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.