தினமணி 19.04.2010
மின்கம்பங்களில் விளம்பரப் போர்டுகள்: மாநகராட்சி, சுற்றுலாத் துறை மீது வழக்கு
மதுரை, ஏப். 18: மதுரையில் மின் கம்பங்களில் விளம்பரப் பலகைகள் வைத்திருந்ததாக மாநகராட்சி மற்றும் சுற்றுலாத் துறை மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் உள்ள மின் கம்பங்கள், தொலைபேசிக் கம்பங்களில் பலர் விளம்பரப் பலகைகளை வைத்திருந்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து மதுரை மாநகர் உதவி போலீஸ் கமிஷனர் வெள்ளத்துரை விளம்பரப் பலகைகளை வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் காவல் நிலையப் போலீஸôர், மின் கம்பங்களில் விளம்பரப் பலகைகளை வைத்திருப்போர் குறித்து விபரம் சேகரித்தனர்.
கீழச் சித்திரை வீதியில் மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களில் மாநகராட்சி சார்பிலும், சுற்றுலாத் துறை சார்பிலும் விளம்பரம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அதை விடியோவில் பதிவு செய்த போலீஸôர் மாநகராட்சி மற்றும் சுற்றுலாத் துறை மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.