தினகரன் 02.09.2013
மின்மோட்டாருடன் கூடிய மினி குடிநீர் தொட்டி திறப்பு
இடைப்பாடி, : இடைப்பாடி அருகே வெள்ளாண்டி வலசையில், மின்மோட்டாருடன் கூடிய மினி குடிநீர் தொட்டியை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
இடைப்பாடி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், ரூ23.40 லட்சம் மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய மினி குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளாண்டிவலசை 22வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கதிரேசன், துணை தலைவர் ராமன், கந்தசாமி, நகர ஜெ.பேரவை பொருளாளர் நாராயணன், இளைஞர்கள் பாசறை செயலாளர் சங்கர்கணேஷ், கவுன்சிலர்கள் முருகன், தனம், செந்தில்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.