தினமணி 05.03.2013
மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை: ஆணைய
மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை: ஆணைய
சிதம்பரம் நகராட்சி குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால், இணைப்பு துண்டிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி: நகராட்சி குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்துவது சட்டப்படிக் குற்றமாகும்.
அவ்வாறு யாரேனும் மின் மோட்டார் பொருத்தியிருந்தால் உடனே அகற்றிவிடவும். அகற்றாவிடில், நகராட்சி அலுவலர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டால் குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும்.
அத்துடன் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, வீட்டு உரிமையாளர் மீது வழக்குத் தொடரப்படும் என ஆணையர் ஆர்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.