தினகரன் 27.05.2010
மீண்டும் திறக்க கவுன்சிலர்கள் பரிசீலனை மாநகராட்சி கம்ப்யூட்டர் பயிற்சி மையம்
பெங்களூர், மே.27: பெங்களூர் மாநகராட்சி சார்பில் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை மீண்டும் இயக்குவதற்கு கவுன்சிலர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
மாநகராட்சி சார்பில் 26கம்யூட்டர் பயிற்சி மையங் கள் இயங்கி வந்தன. அவற் றில் ரூ.1கோடி மதிப் பிலான கம்ப்யூட்டர்கள் நிறுவப் பட்டு பயிற்சி அளிக் கப்பட்டு வந்தது. குறைவான ஊதியம், பணிப்பாதுகாப்பு இன்மை ஆகியவற்றால் பயிற்சி அளித்தவர்கள் மையங்களை விட்டு விலகி னர். எனவே, பல மையங்கள் மூடப்பட்டன.
கவுன்சிலர்கள் அம்மை யங்களை சோதித்து பழைய கம்ப்யூட்டர்கள் ரூ.6லட்சத் துக்கு மட்டுமே விலை போகும் என தெரிய வந் துள்ளது அவர்களை அதிர்ச் சிக்குள்ளாக்கியது. இருப்பி னும் தாழ்த்தப்பட்ட மாண வர்களுக்கு இலவச பயிற்சி அளித்துவந்த இக் கம்ப்யூட் டர் மையங்களை மீண்டும் இயக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.