தினமணி 27.08.2010
முன்னாள் பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்களுக்கு சலுகைகள் வழங்க கோரிக்கை
தக்கலை, ஆக. 26: தமிழக அரசு, முன்னாள் பேரூராட்சி, ஊராட்சி, தலைவர்களுக்கு பல சலுகைகளை வழங்க வலியுறுத்தி பேரூராட்சித் தலைவர்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் கூட்டம் தக்கலை உதயதாரகையில் நடைபெற்றது.
கூட்டத்தில், புதிய தலைவராக பி.டி.எஸ். மணி, துணைத் தலைவர்களாக அசோகவனம் சந்திரசேனன், திரசம்மாள், செயலர்கள் என்.எம். செல்வகுமார், டி.கிதியோன்ராஜ், பொருளாளர் எம்.எம். மீரான் மைதீன்,செயற்குழு உறுப்பினர்களாக பிராங்கிளின், ஷாகுல் ஹமீது, வில்லியம் ராஜ், ராமகிருஷ்ணன், புஷ்பம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் ஜான்சன், பென்சாம், எஸ்.ஏ.புகாரி, சிறுமணி, அருளப்பன், பொன்.பாலையன், பிறகாசி, விஜயபத்மகுமாரி, மீனாட்சி அம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 1970-ல் இருந்து இன்றுவரை பெரும்பான்மையானஊராட்சித் தலைவர்கள் வறுமையால் வாடுகிறார்கள்.
எனவே சட்டப்பேரவை உறுப்பினர்களை போல முன்னாள் பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்களின் பணியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பென்சன், இலவச பஸ்பாஸ், மருத்துவப் படி, மருத்துவ காப்பீட்டு வசதி, வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனையும் வீடும் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி உதவ வேண்டும் என தமிழக அரசை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது