தினகரன் 25.08.2010
மெட்ரோபவன் கட்ட நிலம் கொடுக்க மாநகராட்சி மறுப்பு
மும்பை,ஆக.25: மகாலட்சு மியில் மெட்ரோ பவன் கட்டுவதற்கு மாநகராட்சி நிலம் கொடுக்க மறுத்து வருகிறது. மும்பையில் அமைக்கப் பட இருக்கும் 9 மெட்ரோ ரயில் திட்டங்களின் தலைமை அலுவலகத்தை மகாலட்சுமியில் கட்ட மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் முடிவு செய்துள் ளது. இதற்காக ரேஸ் கோர் சில் (குதிரைப் பந்தய மைதானம்) உள்ள நிலத்தில் 6 ஹெக்டேர் நிலத்தை கொடுக்கும் படி கேட்டு இருந்தது.
இது தொடர்பான மும்பைபெருநகர வளர்ச்சி ஆணைய கமிஷனர் ரத்னா கர் கெய்க்வாட் மும்பை மாநகராட்சி கமிஷனரை சந்தித்து பேசினார். இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் ரேஸ்கோர்ஸ் நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத் திற்கு கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மாநகராட்சி கமிஷனர் ஷத்திரியா தெரிவித்துள் ளார்.
மகாலட்சுமியில் மெட்ரோ, மோனோ மற்றும் புறநகர் ரயில் வழித் தடங்கள் ஒரு இடத்தில் சந் திக்க இருக்கின்றன. எனவே இந்த இடத்தில் மெட்ரோ பவனை கட்ட அரசு திட்ட மிட்டு இருந்தது. தற்போது மெட்ரோ பவனுக்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக எம்.எம்.ஆர்.டி.ஏ. தெரிவித் துள்ளது. ஆனால் இட நெருக்கடி காரணமாக மாற்று இடத்தை தேர்வு செய்வது சற்று சவாலான காரியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.