தினபூமி 14.06.2013
மெரினாவில் கடைகள் அமைக்க விதிமுறை ஐகோர்ட்டில் தாக்கல்

கட்டுப்பாட்டு விதிமுறைகள் கொண்ட வரைவு அறிக்கையை சென்னை மாநகராட்சி
ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. சென்னையை சேர்ந்த காந்தி ஜி பொது
மன்றத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த ஜனவரி மாதம் சென்னை
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலக புகழ்பெற்ற முக்கிய இடமாகும். இந்த
புகழ்மிக்க கடற்கரையில் தன்னிச்சையாக கடைகளை அமைத்து வியாபாரம் செய்து
வருகின்றனர். அந்த கடைகளில் அழகு சாதன பொருட்கள், சுட வைத்து உண்ணுகின்ற
உணவு வகை கடைகள் சில பொழுது போக்கு கடைகள் அன்றாடம் நடைபெற்று வருகிறது.
சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடும் இடமாக உள்ளது இந்த
கடைகளால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை
அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்யபடவில்லை இதனால் புகழ்மிக்க கடற்கரை
மாசுக்கு உட்படுகிறது. ஆகவே மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை நடத்த தடை
விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்கும் ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி
எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்சு இந்த மனுவுக்கு என்ன
பதில் தெரிவிக்க போகிறீர்கள்? என்று சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பி
அந்த அறிக்கையை. அதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கறையில்
இயக்கும் கடைகளுக்கு விதிமுறைகளை வகுத்து தமிழக அரசிடம் ஆலோசித்து
இருந்தனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கறோம் என தெரிவித்தனர்.
அதன் படி நேற்று மாநகராட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதன் விதிமுறை வரைவு அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அதில் தெரிவித்ததாவது சென்னை மெரினா கடற்கரை சுமார் 3.48 கிலோ மீட்டர்
நீளத்தை கொண்டது உலகிலேயே மூன்றாவது பெரிய புகழ்மிக்க கடற்கரையாகும்.
தினந்தோறும் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் ஒன்றாக கூடுகின்ற இடமாகும்.
இது வரை சுமார் 1489 கடைகள் அமைத்து சுடச்செய்து உண்ணுகின்ற உணவைவிற்கும்
வியாபாரிகள் அழகு சாதன பொருட்களை விற்க்கும் வியாபாரிகள் பொழுது போக்கு
பொருட்களை விற்கும் கடைகாரர்கள், பொழுது போக்கு சாதனங்களை வைத்து
விளையாட்டு காட்டி கடை நடத்தும் வியாபாரிகள் மெரினா கடற்கரை மண்ணிலே
வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் குப்பை கழிவுகள் அதிக அளவில்
சேர்கின்றன. இவ்வாறு நடைபெறாமல் தடுக்க ஒழுங்குமுறைபடுத்தி கட்டுபடுத்த
கடைகளில் அமைப்பை மாற்றியமைக்க மாநகராட்சி சில விதிமுறைகள் வகுத்துள்ளது.
அவைகள் வருமாறு:-
- கடைகளை தற்போது இருக்கின்ற இடத்தில் இருந்து சற்று அப்புறப்படுத்தப்படும்.
- மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை பின்பக்கத்தில் இந்த கடைகளை மாற்றப்படும்.
- வியாபாரிகள் அமைக்கின்ற கடைகள் நிரந்தர கடைகளாக இருக்க கூடாது. நடமாடும் கடைகளாகவும், உடனே பிரிக்கின்ற வகையில் அமைக்க வேண்டும்.
- காந்தி சிலை பின்பக்கம் சுமார் 200 மிட்டர் தொலைவில் 540 கடைகள் 6 வரிசைகளாக அமைக்க வேண்டும்.
- உழைப்பாளர் சிலை பின்பக்கம் சுமார் 5 வரிசைகளாக அமைக்க வேண்டும்.
- வியாபாரிகள் அனைவருக்கும் புகைப்பட அடையாள சென்னை மாநகராட்சி வழங்கும்.
- உழைப்பாளர் மற்றும் காந்தி சிலை நுழைவு செக்போஸ்ட் கேட் அமைத்து புகைப்பட அடையாள அட்டையை காண்பித்த பிறகு அனுமதிக்கப்படும்.
- பொதுமக்களுக்கு, கடைகாரர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.
- அனைத்து கடைகள் நெடுகிலும் குப்பை தொட்டிகள் அமைத்து மாநகராட்சி அதை
அப்புறபடுத்தும். இந்த கடைகளும் பராமரிப்புக்கும் குறிப்பிட்ட கட்டணம்
வசூலிக்கப்படும்.
- இந்த நடவடிக்கை அனைத்தும் கடற்கரை சுத்தத்தை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது.
இந்த வரைவு அறிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதியாக பொறுப்பு
வகிக்கும் ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணா வழக்கை ஒரு
வார காலத்திற்கு ஒத்திவைய்தது. மாநகராட்சியின் விதிமுறைகளை எப்பொழுது
செய்லபடுத்தப்படும் என்பது குறித்து 1 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ்
அனுப்பி உத்தரவிட்டார்