தினகரன் 18.06.2010
மேட்டுப்பாளையம் ரோடு புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இயக்கம்
மேட்டுப்பாளையம் ரோடு புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று முதல் பஸ்கள் சென்றன.
கோவை, ஜூன் 18: மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து நேற்று புதிய பஸ்கள் இயக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கடந்த 15ம் தேதி துவக்கப்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மேட்டுப்பாளையம், குன் னூர், நீலகிரி, கோத்தகிரி, மஞ்சூர், குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிக ளுக்கு 13 வழித்தடங்களில் பஸ்கள் இயக்க உத்தரவிடப்பட்டது.
119 அரசு பஸ்கள், 33 தனியார் பஸ்கள், 22 நகர அரசு மற்றும் தனியார் பஸ்கள் என தினமும் 174 பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்ட் வழியாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில் அனைத்து வழிதடங்க ளிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதுவரை காந்திபுரத்திலிருந்து மேட்டுப்பாளையம், பத்ரகாளியம்மன் கோயிலுக்கு இயக்கப்பட்டு வந்த விரைவு பஸ்கள் மட்டும் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்பட்டது. குன்னூர், நீலகிரி, கோத்திகிரி, கூட லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக் கம் போல காந்திபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தான் பஸ்கள் இயங்கின.
கோவை போக்குவரத்து கழக மேலாளர் சந்திரமவுலி கூறுகையில், ” மேட்டுப்பாளையம் செல்லும் பஸ் களும், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து சுற்று பஸ்களும் இயக்கப்பட்டது. படிப்படியாக இதர பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும். பஸ் ஸ்டாண்ட் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது, ” என்றார்.
பயணிகள் கூறுகையில், ” ஆண், பெண்களுக்கு ஏசி வசதியுடன் தனி ஓய்வு அறை, லிப்ட், தாய்மார்களுக்கு தனி அறை, சமூக விரோத கும்பலை அடையாளம் காண சுழல் கேமரா, வண்ண மீன் காட்சியகம், உண வகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, நவீன கழிப்பறை, காவல் கட்டுப் பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன நிறுத்துமிடம் இருப்பதால் எளிதாக வந்து செல்ல முடிகிறது. ஊட்டி, குன்னூர், கோத்த கிரி பஸ்களை விரைவில் இங்கிருந்து இயக்க வேண்டும், ” என்றனர்.