தினமலர் 31.03.2010
மேல்விஷாரத்தை தரம் உயர்த்தணும் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
ஆற்காடு: மேல்விஷாரம் மூன்றாம் நிலை நகராட்சியின் தரம் உயர்த்த வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேல்விஷாரம் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் முகமது கலிமுல்லா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் அஸ்னாத் அகமது, செயல் அலுவலர் மணிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: மேல் விஷாரம் இப்போது மூன்றாம் நிலை நகராட்சியாக உள்ளது. நகராட்சியின் மூன்றாம் ஆண்டு சராசரி வருமானம் ரூ.2.10 கோடியாகும். எனவே மேல்விஷாரம் நகராட்சியை மூன்றாம் நிலை நகராட்சியில் இருந்து தரம் உயர்த்த வேண்டும். மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்விஷாரம் பகுதியில் அடி ப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.1.60 லட்சம் தோராய மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது உட்பட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:ஜபுருல்லா (திமுக): நகராட்சிக்கு வரவேண்டிய வரிகளை வசூலிக்க மேலும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல்மன்னான் (அதிமுக): மேல் விஷாரம் நகராட்சியை தரம் உயர்த்துவதால் என்ன நன்மை? எனது வார்டில் சிமென்ட் சாலை போடவேண்டும்.தலைவர்: அடுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி எல்லா தெருக்களுக்கும் சிமென்ட் சாலை போடப்படும்.துணைத்தலைவர்: மேல்விஷாரத்தை தரம் உயர் த்துவதால் நகராட்சியில் வள ர்ச்சி பணிகள் மேற்கொள்ள வசதியாக இருக்கும்.புட்டு ரஹ்மான் (அதிமுக) : கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால் எல்லா தெருக்களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.மணிச்சாமி (செயல் அலுவலர்): மேல்விஷாரம் நகராட்சியில் எல்லா இடங்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.யுமாயூன் (திமுக) : கீழ்விஷாரம் குளத்து மேட்டில் கடைகள் கட்டவும், திருமண மண்டபம் கட்டவும், தீர்மானங்கள் போட்டு கிடப்பிலேயே உள் ளது. அது எப்போது செயல்படும்.செயல் அலுவலர்: டெண்டர் விடப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.