மோகனூர் டவுன் பஞ்., வரி வசூலில் சாதனை
மோகனூர்: மோகனூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், 100 சதவீதம் வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மோகனூர் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அவற்றில், 3,000க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. டவுன் பஞ்சாயத்தில் வசித்து வரும் பொதுமக்களிடம் சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் வசூல் மற்றும் கடை வாடகை ஆகியவற்றை, ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் வசூல் செய்வது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சொத்துவரி, தொழில் வரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை வசூல் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். அவர்களது இந்த முயற்சியால், இந்த ஆண்டு, 100 சதவீதம் வரி வசூல் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம், 35 ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீதம் வரி வசூல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரி வசூல் இலக்கை பூர்த்தி செய்த அலுவலர்கள், பணியாளர்களை, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் வெங்டேசன் பாராட்டினார்.