மாலை மலர் 07.10.2010
ரங்கராஜபுரம் மேம்பலம் ஜனவரி மாதம் திறக்கப்படும்
; மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை
, அக். 7- கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் சென்னை மாநகராட்சி–ரெயில்வே துறை சார்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலப்பணியை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-சென்னை மாநகராட்சி மேயராக மு
.க.ஸ்டாலின் பொறுப்பு வகித்தபோது சென்னை மாநகரின் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக 9 மேம்பா லங்கள் கட்டி திறந்து வைத்தார். 2006-ம் ஆண்டு முதல்–அமைச்சர் கருணாநிதி ஆணைப்படியும், துணை முதல்– அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரைப்படியும் சென்னை மாநகராட்சி சார்பில் 6 மேம்பாலங்கள், ஒரு சுரங்கப்பாதை ரூ. 134 கோடியே 87 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகரில் மேலும்
10 இடங்களில் பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகிறது. கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் ரூ. 23 கோடியே 76 லட்சம் செலவில் மேம்பாலம் கட்டும் பணியினை சென்னை மாநகராட்சியும், ரெயில்வே துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.அதன்படி பசுல்லா சாலை பக்கம்
264.54 மீட்டரும், ரங்கராஜபுரம் பக்கம் 303.40 மீட்டரும், கோடம்பாக்கம் ரெயில் நிலையம் அருகில் 297 மீட்டரும், ரெயில்வே பகுதியில் 97.90 மீட்டர் என மொத்தம் 962.14 மீட்டர் நீளமும், 8.5 மற்றும் 6.5 அகலமும் கொண்டதாக இம்மேம்பாலம் “ஒய்” வடிவமைப்பில் கட்டப்படுகிறது. இரு வழிவாகனப் போக்குவரத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்படுகிறது.ரெயில்வே தடத்தின் மீது கட்டப்படும் மேல்தளம் சுமார்
1500 டன் எடை தாங்கும் வகையில் நவீன வகையில் வடிவமைக்கப்படுகிறது. இப்பாலம் அமைவதன் மூலம் கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், தியாகராயநகர், மாம்பலம் அதன் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இப்பாலப்பணிகள் வரும் டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதத்தில் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.கணேசபுரம் மேம்பாலம்
, வியாசர்பாடி மேம்பாலம், தங்கச்சாலை மேம்பாலம், வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, ஸ்டான்லி சுரங்கப்பாதை போன்ற பல்வேறு பணிகள் வடசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது துணை மேயர் சத்தியபாமா
, துணை ஆணையர் தரேஸ்அகமது, மண்டலக்குழு தலைவர் ஏழுமலை, கவுன்சிலர்கள் சு.ராஜம், சுசீலா கோபாலகிருஷ்ணன், வெல்டிங்மணி, தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மேற்பார்வை பொறியாளர் ராமமூர்த்தி உடன் இருந்தனர்.