தினமணி 03.07.2013
தினமணி 03.07.2013
ராசிபுரத்தில் மக்களை நோக்கி நகராட்சித் திட்டம்
ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் “மக்களை நோக்கி நகராட்சி’ என்றத் திட்டம் தொடக்கிவைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம், பத்திரம் நகல், வில்லங்கச் சான்று ஆகியவற்றை
இணைத்து சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் கட்டண பெயர் மாற்றம்,
ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கு சான்று
வழங்குதல், புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல் போன்றவற்றிற்கு
விண்ணப்பிப்பது, நகரில் கட்டடம் கட்ட ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை
சம்மந்தப்பட்ட இடத்திலேயே ஆய்வு செய்து, அன்றே தீர்வு காணப்பட்டு,
பொதுமக்கள் விண்ணப்பித்த சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
ராசிபுரம் நகராட்சியில் 7, 8-ஆவது வார்டுகளில் திங்கள்கிழமை தொடக்கி
வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், அந்த வார்டு பொதுமக்கள் பெயர் மாற்றம்,
புதிய வீட்டு வரி ரசீது, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு
கேட்டல் உள்ளிட்ட தேவைகளுக்கு மனு கொடுத்தனர். அப்போது, மனுதாரர்களுக்கு
உரிய ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்தத் திட்ட முகாமை, ராசிபுரம் நகர்மன்றத் தலைவர்
எம்.பாலசுப்பிரமணியம் தொடக்கிவைத்தார். நகராட்சி ஆணையர்
கே.கிருஷ்ணமூர்த்தி, நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், நகர்மன்ற
உறுப்பினர் ஆர்.பி.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.