லூர்துபுரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு
அவிநாசி லூர்துபுரம் பகுதிக்கு குடிநீராக விநியோகிக்க அவிநாசி எம்எல்ஏ ஏ.ஏ.கருப்பசாமி ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தப் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து “தினமணி’ யில் கடந்த ஏப்.28-ம் தேதி செய்தி பிரசுரமானது. இதைத் தொடர்ந்து, தண்டுக்காரம்பாளையத்தில் இருந்து, தாளக்கரைப் பிரிவு வழியாக செல்லும் ஆற்றுக் குடிநீரை லூர்துபுரத்துக்கு கொண்டு செல்ல அவிநாசி எம்எல்ஏ ஏ.ஏ.கருப்பசாமி முடிவு செய்தார். இதற்காக சுமார் 2.5 கி.மீ. தூரம் குழாய் அமைப்பதற்கு சட்டப்பேரவை தொகுதி நிதியில் இருந்து ரூ.2.6 லட்சம் ஓதுக்கீடு செய்தார்.
இதன் மூலம் தாளக்கரைப் பிரிவில் இருந்து லூர்துபுரத்திற்கு குடிநீர் செல்ல குழாய் அமைக்கப்பட்டது. தரைத் தொட்டியும் அமைக்கப்பட்டு, தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.