தினமலர் 04.03.2013
வடக்கநந்தல் பேரூராட்சியில் தானியங்கி சோலார் விளக்குகள்
கச்சிராயபாளையம்:கச்சிராயபாளையம் – வடக்கநந்தல் பேரூராட்சியில் சங்கராபுரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 லட்சத்து 52,000 ரூபாய் மதிப்பில் சூரிய சக்தியில் எரியும் நான்கு சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
கச்சிராயபாளையம் புதிய பஸ் நிலையம், பொட்டியம் சாலை ஊற்று ஓடைப்பகுதி, கோமுகி அணை உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இரண்டு என நான்கு சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
தானியங்கி திறன் கொண்ட சோலார் விளக்குகளாக பொருத்தப்பட்டுள்ளது. பகலில் சூரிய வெப்பமானது மின் சக்தியாக சேமிக்கப்பட்டு, இரவு நேரங்களில் தானாகவே ஒளிரும் திறன் கொண்டவை.