தினமணி 29.06.2010
வத்தலகுண்டில் ‘தமிழ் வாழ்க‘ ஒளிரும் போர்டு
வத்தலகுண்டு, ஜூன் 28: உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய கட்டடங்களில் “தமிழ் வாழ்க‘ என்ற வாசகத்துடன் ஒளிரும் போர்டு வைக்க வேண்டுமென அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், தி.மு.க. நகரச் செயலர் கே.சின்னத்துரை, நிர்வாகிகள் தவமணி, சோடா குமரவேல், அமுதவேல் மற்றும் பலர் பார்வையிட்டனர்.