தினமணி 01.04.2013
வத்தலகுண்டு பேரூராட்சிக் கூட்டம்
வத்தலகுண்டு பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் சுசிலா பாண்டியன் தலைமை வகித்தார். கவுன்சிலர் பாண்டியன், துணைத் தலைவர் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் முருகேசன் வரவேற்றார். தனி ஈழம் அமைக்க, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.