வரி பாக்கி: வணிக வளாகத்துக்கு நகராட்சி எச்சரிக்கை
ரூ.2.82 லட்சம் வரி பாக்கியை 24 மணி நேரத்துக்குள் செலுத்த வேண்டும் என பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ரங்கா வணிக வளாகத்துக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பண்ருட்டி ராஜாஜி சாலையில் ரங்கா லாட்ஜ் உள்ளது. இதில் லாட்ஜ், பார், வணிக வளாகங்கள், வங்கி உள்ளிட்டவை உள்ளன. இதேபோல் சென்னை சாலையில் திருமண மண்டபமும் உள்ளது. இக்கட்டடங்களுக்கான உரிய வரியை நகராட்சி நிர்வாகத்தில் கட்டாமல் அதன் உரிமையாளர் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கட்டடங்களுக்கான வரி ரூ.2.82 லட்சத்தை செலுத்தவில்லையாம். இதனால் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.ராதா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் வணிக வளாகத்தின் முன்பு கூடி ஒலிப்பெருக்கி மற்றும் தண்டோரா மூலம் 24 மணி நேரத்தில் வரியை செலுத்த வேண்டும் என எச்சரித்தனர்.