தினமலர் 11.03.2010
வரி வசூல் மையம் திறப்பு
நாகை : நாகூர் புதிய பஸ்ஸ்டாண்டில் கம்ப்யூட்டர் வரி வசூல் மையம் திறப்பு விழா நடந்தது. நாகை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமை வகித்தார். நகராட்சி துணைத்தலைவர் மாரிமுத்து, கவுன்சிலர் பாபு, பொறியாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சித்தலைவர் சந்திரமோகன் கம்ப்யூட்டர் வரிவசூல் மையத்தை திறந்து வைத்து பேசுகையில், நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, நகராட்சி வாடகை கடைகளின் வரி ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் சிரமமின்றி நாகூரிலேயே செலுத்த வரி வசூல் மையத்தை திறக்கப்பட்டுள்ளது என்றார். விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள், வியாபாரிகள், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.