தினமலர் 03.05.2013
வரி விதிப்பு மறுமதிப்பீடு ; நகராட்சி இயக்குனரகம் உத்தரவு
கம்பம் : வரிவிதிப்பு இல்லாத இனங்கள் மற்றும் குறைவாக வரி விதிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை கண்டறிந்து மறுமதிப்பீடு செய்ய நகராட்சிகளின் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில், வளர்ச்சி பணிகள் செய்ய, நிதி பற்றாக்குறை உள்ளது. வரி வருவாய் குறைவாக உள்ளது. வரி விதிப்பில், முறைகேடுகள், குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இதை அடுத்து, தமிழக நகராட்சி, உராட்சிகளில் வரிவிதிப்பு செய்யாத இனங்கள், வரி குறைவாக விதிக்கப்பட்டுள்ள வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களை கண்டறிந்து, வரிவிதிப்பை மறுமதிப்பீடு செய்ய நகராட்சிகளின் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, நகராட்சிகளில் அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டு, வரி விதிப்பு குறித்து, மறு ஆய்வு செய்யப்படுகிறது.