தினமலர் 25.03.2010
வரிவசூல் செய்ய ஜப்தி வாகனம் ராமநாதபுரத்தில் அறிமுகம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் வரிவசூல் பாக்கியை வசூல் செய்வதற்கு ,அதிரடியாக ஜப்தி வாகனம் வலம் வரும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சியில் சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம் போன்றவைகளை செலுத்த நகராட்சி பல் வேறு வழிகளில் அறிவிப்பு செய்து வருகிறது. இருந்தும் வரிபாக்கியை செலுத்துவதில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளதால் நகராட்சி மூலம் திட்டப்பணிகள் மேற்கொள்ள நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள் ளது.
எனவே, வரிவசூலை தீவிரப்படுத்த நகராட்சி கமிஷனர் முஜ்பூர்ரஹ்மான் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். வருவாய் ஆய்வாளர் காந்தி தலைமையில் வரி பாக் கியை வசூல் செய்ய ஜப்தி வாகனத்துடன் நகராட்சியில் தீவிர வசூல் வேட் டையில் இறங்கி உள்ளனர். நகராட்சி கமிஷனர் முஜ்பூர் ரஹ்மான் கூறியதாவது:நகராட்சியில் வரிபாக்கி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளது. பொது மக் கள் தங்களுடைய வரி பாக்கியை மார்ச் 29ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத் தில் வரிபாக்கி உள்ள சொத்துகளை சட்டப்படி ஜப்தி செய்ய நேரிடும். வரிவசூல் அதிகமாக இருந் தால் ரோடு, குடிநீர் வசதி போன்ற பணிகளை தொய்வின்றி செய்வதற்கு ஏதுவாக இருக்கும், என்றார்.