தினமணி 19.09.2009
வளர்ச்சி பணி ஆய்வில் மேயர், ஆணையர்
சேலம், செப். 18: சேலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேயர் மற்றும் ஆணையர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சேலம் மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது சாக்கடை அமைக்கும் பணி, சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை மேயர் ஜெ.ரேகா பிரியர்தர்ஷினி, ஆணையர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் பார்வையிட்டனர். 3, 18 வார்டில் ரூ.42 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை செய்தனர். பூஜை செய்த பின் மேயர் ஜெ.ரேகா பிரியதர்ஷினி கூறியது: சேலம் மாநகராட்சியில் நடந்து வரும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் தரமானதாகவும், உடனுக்குடன் முடிவுக்கவும் கேட்டுக் கொண்டு கண்காணித்து வருகிறோம். சாக்கடை, சாலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார். மண்டலத் தலைவர் சரவணன், அதிகாரிகள் லதா, மகாதேவன், பாலகிருஷ்ணன், திவாகரன், பாண்டியன் கலந்துகொண்டனர்.