தினமலர் 23.04.2010
வளர்ச்சிப்பணிகள் : கலெக்டர் ஆய்வு
அரியலூர்:அரியலூர் நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆபிரகாம் ஆய்வு மேற் கொண்டார்.அரியலூர் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியிலிருந்து நகராட்சி சார்பில் ரூ.ஒரு லட்சத்தில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடையை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்பு சடையப்பன் தெரு, சேர்வைத் தெருவில் பெட்டிக்கடை, பூக்கடை நடத்தி வருபவர்களிடம் நகராட்சி அனுமதி பெறாவிட்டால் அனுமதி பெற்று கடை நடத்துமாறு அறிவுறுத்தினார். கல்லக்குடி தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெண்கள் பொது கழி வறையை ஆய்வு மேற் கொண்டார். பின்பு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் நோயாளிகள் தங்கும் படுக்கை பகுதியை ஆய்வு மேற்கொண்டு மருத்துவ வசதி, உணவு வசதி குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.ஆய்வின் போது தலைமை மருத்துவர் சிவக் குமார், நகராட்சி செயல் அலுவலர் சமயசந்திரன், பொதுப்பணித்துறை மேற் பார்வையாளர் பாண்டு, பொறியாளர் நிலேஷ்வரன், டாக்டர் அன்புகனி உட்பட பலர் உடனிருந்தனர்.