தினமணி 03.05.2010
வள்ளியூர் பேரூராட்சியில் கலையரங்கம் இன்று திறப்பு
வள்ளியூர், மே 2: வள்ளியூர் சிறப்புநிலை பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் கலையரங்கம் திறப்பு விழா (மே 3) திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் திருவள்ளுவர் கலையரங்கம் கட்டுவதற்கு நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எச்.வசந்தகுமார் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ரூ.9.20 லட்சமும், பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் ரூ.12.20 லட்சம் செலவில் திருவள்ளுவர் கலையரங்கம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இக்கலையரங்கம் திறப்பு விழா (மே 3) திங்கள்கிழமை நடைபெறுகிறது. திறப்பு விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் இரா.சங்கரநாராயணன் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் இரா.ஆறுமுகநயினார் முன்னிலை வகிக்கிறார். வசந்தகுமார் எம்.எல்.ஏ புதிய கலையரங்க கட்டடத்தை திறந்து வைத்துப் பேசுகிறார்.
வார்டு உறுப்பினர்கள் அய்யாபிள்ளை, மகராசி, சேதுராமலிங்கம், பொன்ஜெஸிபாய், அமிர்தகனி, ராஜகுமார், கீதா, பாஸ்கர்பனிராஜன், யசோதா, ஜெபிடார்லிங், தேவகலாமகேஷ், கண்ணன், லாரன்ஸ், மாடசாமி, குமாரசுவாமி ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். பேரூராட்சி செயல்
அலுவலர் ஆ.முத்துகுமார் வரவேற்றுப் பேசுகிறார். இளநிலை உதவியாளர் சா.ஜவாஹர் நன்றி கூறுகிறார்.