தினமலர் 04.10.2013
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நகராட்சி ஊழியர்கள், கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விருத்தாசலத்தில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து, பொது மக்கள் அவதியடைந்தனர். அதைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் மாலை நேரங்களில், நகர்புறத்தில் கொசு மருந்து தெளித்து வருகின்றனர்.
துப்புரவு அலுவலர் சக்திவேல் கூறுகையில், “நகராட்சியில் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த, தினமும் இரண்டு வார்டுகள் வீதம் 17 வார்டுகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்துள்ளது. மேலும், குடிசைப் பகுதிகள், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசுக்களை உற்பத்தி செய்யும் லார்வா புழுக்களை ஒழிக்க கை தெளிப்பான்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது’ என்றார்.