தினமலர் 07.06.2010
வீடு கட்ட மானிய கடன் உதவி
சிவகங்கை: பேரூராட்சிகளில் மனை பட்டா உள்ள ,பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, வீடு கட்ட கடன் வழங்கப்படவுள்ளது. இதில் (இ.டபிள்யு. எஸ்., டைப்) வீடுகட்ட ஒரு லட்சம்; குறைந்த வருவாய் பிரிவுக்கு (எல்.ஐ.ஜி., டைப்) ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படும். இரு பிரிவினருக்கும் 5 சதவீத மானிய வட்டி, ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டும் வழங்கப்படும். 1,200 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத் தில் பயன் பெற, “தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கே.டி. எம்., காசிம் பில்டிங், ராமநாதபுரம்‘ என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளார்.