தினத்தந்தி 07.08.2013
வீரபாண்டி பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள நெ.4 வீரபாண்டி
பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு பணிகள் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலத்தை
பேரூராட்சி தலைவர் கே.வி.என்.ஜெயராமன் தொடங்கிவைத்தார். செயல் அலுவலர்
முருகேசன் முன்னிலை வகித்தார். அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மழைநீர்
சேகரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளியில் இருந்து முக்கிய
வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி
கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
முடிவில் பேரூராட்சி அலுவலர் நம்மாழ்வார் நன்றி கூறினார்.