தினத்தந்தி 23.08.2013
வேலூர் ஓட்டேரி பகுதியில் மேயர், ஆணையாளர் அதிரடி ஆய்வு
வேலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள்
பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து ஆய்வு.
மேயர் கார்த்தியாயினி,
துணை மேயர் வி.டி.தருமலிங்கம், ஆணையாளர் ஜானகி மற்றும் மாநகராட்சி
அதிகாரிகள் நேற்று ஓட்டேரி ஏரியில் ஆக்கிரமிப்பு பகுதிகளையும், அதுபோல்
ஓட்டேரி கோமுட்டி குளத்தையும் அந்த குளக்கரையில் வீடு கட்டியவர்களின்
வீட்டு ஆவணங்களையும் ஆய்வு செய்து சரி பார்த்தனர்.
இதுபற்றி மேயரிடம் நிருபர்கள் கேட்டபோது
‘தொடர்ந்து வேலூர் முழுவதும் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட
இடங்களை கையகப்படுத்த தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று
தெரிவித்தார்.