தினத்தந்தி 30.11.2013
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு உறுப்பினராக மேயர் கார்த்தியாயினி நியமனம்
திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின்
கல்விக்குழுவில் ஆட்சி மன்ற குழுவினர் உள்பட ஏற்கனவே 63 பேர் இடம்
பெற்றிருந்தனர். இந்த நிலையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும், இணை
வேந்தருமான பழனியப்பன் பரிந்துரையின்பேரில் மேயர் கார்த்தியாயினி,
விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியின் செயலர் செந்தில்குமார்
ஆகியோர் கல்விக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து
திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 65 ஆக
உயர்ந்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பதவி காலம் 3
ஆண்டுகள் ஆகும்.