தினமலர் 13.04.2010
ஸ்ரீவை., டவுன் பஞ்., புதிய கட்டட திறப்பு விழா
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்., புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. ஸ்ரீவைகுண்டம் டவுண் பஞ்., கட்டடம் மிகவும் பழைமையான இடிந்த நிலையில் உள்ளது என தினமலரில் செய்தி வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக அண்ணாமறுமலர்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கபட்டு கூட்டஅரங்கு, பஞ்சாயத்து கட்டடம் என இரண்டு மாடிகளில் கட்டடம் கட்ட அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பவுன்பஞ்., கட்டடத்தின் திறப்புவிழா நடந்தது.விழாவிற்கு டவுண் பஞ்., தலைவர் கந்தசிவசுப்பு தலைமைவகித்து திறந்து வைத்தார். துணைத்தலைவர் பால்துரை நியமன குழுஉறுப்பினர் பெருமாள், செயல்அலுவலர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உறுப்பினர்கள், தலைமைஎழுத்தர் வேல்சாமி, தமிழ்செல்வன், மற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர