தினகரன் 21.10.2010
உத்தமபாளையம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டிற்கு தடை அக்.25 முதல் அமலாகிறது
உத்தமபாளையம், அக். 21: உத்தமபாளையம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. அக்.25 முதல் தடை அமலாகிறது. தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பை உபயோகத்திற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போடி உட்பட சில ஊர்களில் இத்தடை அமலில் உள்ளது. மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் தடையை படிப்படியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் தாலுகா தலைநகரம் என்பதால் தின மும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள டீ கடைகள், ஓட்டல்களில் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. பலசரக்கு, ஜவுளி, மருந்து கடைகள் உள்ளிட்ட அனைத்திலும் பிளாஸ்டிக் பை உபயோகத்திற்கு தடையை அமல்படுத்த கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து பேரூராட்சி தலைவர் மெஹர் நிஷா சையது மீரான், துணை தலைவர் முகமது அப்துல் காசிம் ஆகியோர் வர்த்தக சங்க பிரமுகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் அஜீஸ், துணை தலை வர் அய்யம்பெருமாள், செயலா ளர் வள்ளியப்பன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் 25ம் தேதி முதல் உத்தமபாளையம் நகரில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அனைத்து கடைகளுக்கும் துண்டு பிரசுரங்கள் விநியோ கம் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளை கைவிட வலியுறுத்தி நேற்று பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியும் நடந்தது. பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கி கோட்டைமேடு, மெயின் பஜார், தேரடி வழியாக பேரணி சென்றது. மாணவ, மாணவிகள், வர்த்தக பிரமுகர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் கூறுகை யில், “வரும் 25ம் தேதி முதல் உத்தமபாளையத்தில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ் டிக் டம்ளர்களை பயன்படுத்த கூடாது. இதை மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை அப ராதம் விதிக்கப்படும். இதற்கு பொதுமக்களும், வர்த்தகர்களும் ஒத்துழைப்பு அளித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.