தி இந்து 13.06.2017
சென்னை மாநகராட்சி சார்பில் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
சென்னை மாநகராட்சி சார்பில், உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது.
கடந்த 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில்
ஒரு கோடியே 10 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் (5 முதல் 14 வயதுக்கு
உட்பட்டவர்கள்) உள்ளனர். அதில் ஊரகப் பகுதியில் 81 லட்சம் பேரும், நகரப்
பகுதியில் 20 லட்சம் பேரும் உள்ளனர். அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில்
20 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில்
பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாரஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
நாட்டின் எதிர்கால தூண்களான குழந் தைகளை, இளம் வயதில் பள்ளிக்கு
அனுப்பாமல், வேலைக்கு அனுப்புவதைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் மத்தி
யில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி உலக
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி,
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை
மாநகராட்சியில் நேற்று நடைபெற்றது. அதில் சென்னை மாநகராட்சி ஆணையர்
தா.கார்த்திகேயன் பங்கேற்று, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்ப வேண்டும். பணிக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்ற உறுதிமொழியை
வாசிக்க, மாநகராட்சி அதிகாரிகளும், பணி யாளர்களும், உறுதிமொழி ஏற்றுக் கொண்
டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர்கள் எம்.கோவிந்தராவ்,
ஆர்.லலிதா, எம்.விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
காவல் ஆணையர்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் ஏ.கே
விஸ்வநாதன் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள் மற்றும்
அமைச்சுப் பணி யாளர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதி மொழி
ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாயி, துணை ஆணையர்கள்
அ.ராதிகா, ஆர்.திருநாவுக்கரசு, எஸ்.விமலா, சரவணன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.