தினமணி 10.01.2014
பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு
சோளிங்கர் பேரூராட்சியில் உள்ள பழமை வாய்ந்த அப்பங்கார குளத்தை நபார்டு திட்டம் மற்றும் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ரூ1.12 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைத்து பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர்கள் விளையாட்டுப் பூங்கா ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை வேலூர் மண்டல உதவி செயற்பொறியாளர் ராஜா ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது சோளிங்கர் செயல் அலுவலர் தயாளன், பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.எல்.விஜயன், செயற்பொறியாளர் சந்தோஷ், மன்ற உறுப்பினர்கள் பிரியதர்ஷினி, மணிகண்டன், சுரேஷ், சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.