தினமணி 24.07.2013
திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆணையர் (பொறுப்பு) த. மோகன் முன்னிலை வகித்தார். பல்வேறு பகுதி மக்கள் குறைகள் தொடர்பாக மேயரிடம் மனு அளித்தனர்.
மேலப்பாளையம் ஆமீம்புரம் 7, 8, 9, 10 மற்றும் 11-வது தெரு மக்கள்
மேயரிடம் அளித்த மனு விபரம்: ஆமீம்புரம் 7 முதல் 11-வது தெரு வரை கடந்த 6
மாதங்களாக சரியாக குடிநீர் வரவில்லை. பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும்
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் தெருக்களை மாநகராட்சி
தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
இப்போது ரமலான் நோன்பு காலமாக இருப்பதால் தண்ணீர் இல்லாமல் மக்கள்
மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே, எங்கள் பகுதிக்கு முறையான குடிநீர்
விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.
திருநெல்வேலி நகரம் ரங்கநாதபுரம் பகுதி மக்கள் மேயரை சந்தித்து அளித்த
மனு விவரம்: ரங்கநாதபுரம் கிழக்குப் பகுதியில் வாய்க்கால் ஓரமாக மாநகராட்சி
சார்பில் நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த நடைபாதையை நீண்ட காலமாகப்
பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் இந்த நடைபாதையை சிலர் சட்டவிரோதமாக
ஆக்கிரமித்துள்ளனர்.