இலவச கொசுவலை திட்டம் உற்பத்தியாளர்களுக்கு மாநகராட்சி அழைப்பு
சென்னை, : மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மாநகரில் கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களில் இருந்து பொது மக்களை பாது காக்கும் வகையில், நீர்வழிப்பாதை ஓரங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிசை வாழ் மக்களுக்கு இலவச கொசுவலை வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக கொசுவலைகள் மிக அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றன.
எனவே, அதிக அளவில் கொசுவலைகள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களிடம் இருந்து (ஆண்டு ஒன்றுக்கு ரூ 10 கோடிக்கு மேல் விற்பனை செய்பவர்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அவர்கள் விருப்ப கடிதம், நடுத்தர மற்றும் பெரிய அளவிலான கொசுவலை மாதிரிகளுடன் சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிட வளாகம், மாநகர சுகாதார அலுவலரிடம் வரும் 13ம்தேதி மாலை 5மணிக்குள் நேரில் அளிக்க கேட்டுக் கொள்கிறோம்.