தினமலர் 10.12.2010
ஒரு கோடியில் சிறப்பு சாலை
வேலூர்: ஒரு கோடி ரூபாயில் சிறப்பு சாலை அமைக்க சத்துவாச்சாரி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சத்துவாச்சாரி நகராட்சி கூட்டம் தலைவர் ஜெய லட்சுமி ஏழுமலை தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஜானகிராமன், செயல் அலுவலர் சண்முகம் கலந்து கொண்டனர். “சத்துவாச்சாரி நகராட்சி வார்டுகளில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சிமென்ட், தார் சாலைகள் ஒரு கோடியே 5லட்சம் செலவில் பணிகள் துவங்குவது‘ உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.