தினமணி 29.03.2010
குடிநீர் குழாய் இணைப்பு தொடக்கம் புதுச்சேரி
, மார்ச் 28: புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு தொடக்க விழா நடைபெற்றது.
÷அரும்பார்த்தபுரம் திரெüபதி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற விழாவில் பொது சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் இதனை இயக்கி தொடங்கி வைத்தார். ÷
மேலும் ராதாகிருஷ்ணன் நகர், என்.எஸ் நகர், நடராஜன் நகர், தட்டாஞ்சாவடி, வி.மணவெளி ஆகிய பகுதிகளிலும் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பை அமைச்சர் தொடங்கி வைத்தார். ÷கல்மேடுபேட்டை, கண்ணதாசன் நகர், வி.மணவெளி ஆகிய பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பல்வேறு இடங்களில் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
÷உழவர்கரை நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீóத்தாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.