தினமலர் 31.03.2010
குடிநீர் தொட்டி திறப்பு
வால்பாறை : வால்பாறை டவுன் காந்திசிலை வளாகம் தற்போது பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகளும், பள்ளி மாணவர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல் லும் இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு தாகத்திற்கு குடிக்க கூட குடிநீர் கிடைக்காமல் தவித்தனர். இதை சுட்டிகாட்டி காந்திசிலை வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என ‘தினமலர்‘ நாளிதழில் செய்தி வெளியிடப் பட்டது. இதனையடுத்து, வால்பாறை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அதிரடியாக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதற்கான விழா நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. நகராட்சித்தலைவர் கணேசன் புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். சுகாதார ஆய்வாளர் கருணாகரன், கவுன்சிலர்கள் குசலவன், வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர