தினமலர் 07.04.2010
கொடைக்கானல் நகராட்சியில் ‘பட்ஜெட்‘ தாக்கல் தாமதம்
கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சியில் இந்த நிதி ஆண்டிற்கான ‘பட்ஜெட்‘ தாக்கல் செய்வது குறித்து எவ்வித நடவடிக்கையையும் அதிகாரிகள் மேற் கொள்ளவில்லை என்று கவுன்சிலர்கள் புகார் கூறுகின்றனர்.
அரசு, உள்ளாட்சி அமைப்புகள் வரவு– செலவு திட்டங் களை ஒவ் வொரு ஆண்டும் மார்ச் மாதத் திற்குள் பட்ஜெட் தாக்கல் செய்து, ஏப்., முதல் அமல் படுத்தும். கொடைக்கானல் நகராட்சியில் 2010-11ம் ஆண்டிற்கான பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப் படவில்லை. நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறுகையில், ‘ வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலுக்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் சமர்பிக்கப்படும்‘ என்றார்.