தினகரன் 18.10.2010
சிவகங்கை மாவட்டத்தில் காலாவதி உணவு பொருட்கள் அதிகாரிகள் ஆய்வு
சிவகங்கை, அக். 18: சிவகங்கை மாவட்டத்தில் காலாவதியான உணவுப்பொருட்கள் குறித்து உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை ஆகிய 3 நகராட்சிகளிலும், மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட 12 பேரூராட்சிகளிலும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூட்டாக சேர்ந்த ஆய்வு செய்தனர்.
ஆய்வு செய்ததில் உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்த கலப்பட உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இனிவரும் காலங்களில் பாதுகாப்பான உணவு பொருட்களை விற்பனை செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.