தாம்பரம் பகுதியில் நம்ம டாய்லெட்டுக்கு மக்கள் வரவேற்பு
தாம்பரம், : தமிழகத்தில் முதன்முறையாக தாம்பரம் நகராட்சி சார்பில் ‘நம்ம டாய்லெட்’ என்ற பெயரில் ரூ.6 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கழிப்பறை முற்றிலும் பைபரால் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு என தனித்தனியாக உள்ளது. இதற்கு கட்டணம் கிடையாது. இதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். கழிப்பறைக்கு வருபவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள், இந்த கழிப்பறை திட்டத்தை வரவேற்று எழுதியுள்ளனர்.
இந்த கழிப்பறையை அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று பார்வையிட்டார். மேலும், புத்தகத்தில் பொதுமக்கள் எழுதியுள்ள கருத்துகளை படித்தார். அமைச்சர் சின்னையா, தாம்பரம் நகர மன்ற தலைவர் கரிகாலன், ஆணையர் சிவசுப்பிரமணியன் உடனிருந்தனர்.