தினத்தந்தி 07.11.2013
திருப்பூர் குமரன் நினைவகத்தை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர் குமரன் நினை வகத்தை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளை மாநக ராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினார்கள்.
திருப்பூர் குமரன் நினைவகம்
திருப்பூர் ரெயில் நிலையம் முன் சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் நினைவகம் உள்ளது.
இந்த நினைவகத்தில் குமர னின் வர லாற்றை சித்தரிக்கும் விளக்க படங்கள்,
நூலகம் ஆகியவை அமைந்துள்ளன. குமரனின் தியாகத்துக்கு அடையாள மாக விளங்கி
நிற்கும் இந்த நினைவகத்தை சுற்றி நடை பாதைகள் அமைக் கப்பட்டு இருக்கிறது.
ஆனால் குமரன் நினை வகத்தை சுற்றி இருக்கும் நடைபாதைகளை ஆக்கிர மித்து
தள்ளுவண்டி கடைகள், பழ கடைகள், கார், ஆட்டோ ஓட்டுனர்கள் ஓலை குடிசை அமைத்து
ஆக்கிரமித்து வைத் திருந்தனர். இதனால் குமரன் நினைவகத்தை சுற்றிலும்
அதிகப்படியான ஆக்கிர மிப்புகள் காணப்பட்டன.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதுகுறித்து திருப்பூர் மாநக ராட்சி கமிஷனர் செல்வ ராஜூக்கு புகார்
தெரிவிக்கப் பட்டது. மாநகராட்சி கமிஷன ரின் உத்தரவின் பேரில் 4-வது மண்டல
உதவி கமிஷனர் செல்வநாயகம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை
குமரன் நினை வகத்தை சுற்றி உள்ள ஆக் கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள்.
குறிப்பாக குமரன் நினைவகத்தின் பின் பகுதியில் இருந்த ஆட்டோ, கார்
ஓட்டுனர்களால் அமைக் கப்பட்ட ஓலைக்குடிசை தாழ் வாரம், தள்ளுவண்டி கடை கள்
உள்ளிட்டவற்றை பொக் லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினார்கள்.
எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாமல் இருப்பதற்காக திருப்பூர் வடக்கு
போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக் டர் பதி தலைமையில் போலீ சார் பாதுகாப்பு
பணியை மேற்கொண்டனர். திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து வெளிவரும்
பகுதி, காதர் பேட்டை செல்லும் ரோடு, ஜெய்வாபாய் பள்ளிக்கு செல்லும் ரோடு
பகுதிகளில் ரோட்டோரம் உள்ள ஆக் கிரமிப்புகளையும் மாநக ராட்சி அதிகாரிகள்
முற்றிலும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
