தினகரன் 01.06.2010
நல்லூர் நகராட்சியில் தீராத குடிநீர் பிரச்னை: கவுன்சிலர்கள் புகார்
திருப்பூர், ஜன் 1: நல்லூர் நகராட்சியின் சாதாரணக்கூட்டம் நகராட்சித் தலைவர் விஜயலட்சுமி கோபால்சாமி தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் (பொறுப்பு) ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் துணைத் தலைவர் நிர்மலா மற்றும் கவுன்சிலர் கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நகராட்சி பயன்பாட்டுக்கு தளவாடப் பொருட்கள் வாங்குவது, கொசு மருந்து அடிக்கும் கைப்பம்பு வாங்வது, குடிநீர் அளவு போதுமானதாக இல்லாததால், கூடுதலாக புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்திடம் குடிநீர் பெறுவது என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் விவாதத்துக்கு வைக்கப்பட்டன. இதன் மீது கவுன்சிலர்களின் விவா தம் வருவாறு:
கவுன்சிலர் விஜயகுமார்:
எனது வார்டில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இருக்கும் துப்புரவு தொழிலாளர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடு முறை எடுத்து விடுகின்றனர். இதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.
கவுன்சிலர் சொர்ணாம் பாள்:
எனது வார்டில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதை 8 நாட்களுக்கு ஒரு முறை என மாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். மேலும் பல பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சியில் கூடுதலாக துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். போர் போட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் தண்ணீர் தான் வருவதில்லை. இத னால் போர் போட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை.
செயல் அலுவலர்:
மின்வாரியத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நமக்கு கிடைக்கும் குடிநீர் வெறும் 15 சதவீதம் தான். இதனால் நமக்கு குடி நீர் போதாத நிலை உள்ளது. இதுகுறித்து அரசாங்கத்திடம் கேட்காலாம்.
கவுன்சிலர் சேதுபதி:
தண்ணீர் பிரச்னையில் உரிய நடவடிக்கையில்லையென் றால், இதை கண்டித்து உண்ணாவிரதம் மேற் கொள்ள வேண்டியிருக் கும்.
செயல் அலுவலர்:
கூடுத லாக தண்ணீர் பெறுவதற்கு தேவையான, நிதியை நாம் அரசாங்கத்திடம் கேட்பதா? இல்லை மக்கள் மீது திணிப்பதா? என்பதை கவுன்சிலர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
கவுன்சிலர் தெய்வாத்தாள்:
எனது வார்டில் உள்ள தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை.
இதுகுறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதேபோல் கொசு மற்றும் தண்ணீர் பிரச்னை அதிக அளவில் உள்ளது. இதற்கு உடனடி யாக தீர்வு காணவேண் டும்.
செயல் அலுவலர்:
எனக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுங்கள் அனைத்து பிரச்னைக்கும் உரிய நடவடிக்கை எடுக்கிறேன். மேலும் தண்ணீர் விநியோகிக்கும் நபர்கள் மீது அதிக அளவில் புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர் சுரேஷ்:
எனது வார்டில் உள்ள 21 தெருவிளக்குகளும் எரிவதில்லை.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது. தொடர்ந்து 16 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன