தினமலர் 09.04.2010
நூறு சத வரி வசூல்
அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் விதிக்கப்பட்டுள்ள தொழில் வரி, சொத்துவரி, குழாய் வரி, கடை வரி உட்பட வரியினங்கள் நூறு சதவீதம் என 15 லட்ச ரூபாய் வசூல் செய்யப் பட்டன.நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் அழகு உமாதேவி ஆகியோர் வரி தண்டலர் உட்பட பணியாளர்களை பாராட்டினர். தொடர்ந்து நடந்த பொது ஏலத்தில் தினசரி சந்தை 78 ஆயிரம் ரூபாய்க்கும், வாரச்சந்தை 2. 56 லட்ச ரூபாய்க்கும், கோழிச்சந்தை 95 ஆயிரம் ரூபாய்க்கும் போனது.
