தினமலர் 01.10.2010
பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்க மாற்றுத்திறனாளிக்கு அனுமதி
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி மருத்துவமனை, தங்கும் விடுதிகளில் சேரும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க மாற்றுத்திறனாளிகள் சங்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட மாற்று திறனாளிகள் நலசங்கத்தின் சார்பில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்காக தர்மபுரி நகராட்சியில் உள்ள மருத்துமனை, தனியார் தங்கும் விடுதி மற்றும் வர்த்தக நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சில்லறை முதயில் வாங்கி தரம் பிரித்து மொத்தம் சங்கம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணி ஆணையை தர்மபுரி நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா மாற்றுதிறனாளிகள் நலச்சங்க தலைவர் யுவராஜிடம் வழங்கினார்
. உதவும் உள்ளங்கள் தலைவர் மாணிக்கம், லயன்ஸ் சங்க தலைவர் ரவி, செயலாளர் லட்சுமிகாந்தன், மாற்று திறனாளிகள் நகர செயலாளர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.