தினகரன் 22.07.2010
போடியில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை
போடி, ஜூலை 22: போடி நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. போடி நகராட்சி 33 வார்டுகளிலும் நாய் தொல்லை இருந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிந்த நாய்கள் சாலைகளில் செல்வோரை விரட்டி கடித்தது. நாய்களை அப்புறப்படுத்த வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் நகரில் சுற்றித்திரிந்த நாய்களை நகராட்சி ஊழியர்கள் பிடித்து கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். நாய்களுக்கு அங்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டது. கருத்தடை செய்யப்பட்ட நாய்கள் தனியாக அடைக்கப்பட்டு 3 நாட்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.