தினமணி 20.09.2010
மாநகராட்சி நடமாடும் வரி வசூல் வாகனம் நிற்கும் இடங்கள்
திருச்சி, செப். 19: திருச்சி மாநகராட்சியின் நடமாடும் வரி வசூல் வாகனம், செப். 20 முதல் 25-ம் தேதி வரை நிற்கும் இடங்களை ஆணையர் த.தி. பால்சாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செப். 20 (திங்கள்கிழமை): வார்டு எண் 52: காலை 10-11 மணி– வயலூர் பிரதான சாலை, பிஜி நாயுடு ஸ்வீட் ஸ்டால் அருகில். முற்பகல் 11-12 மணி– அம்மையப்பநகர் பிரதான சாலை, பெட்ரோல் நிலையம் அருகில். வார்டு எண் 53: பகல் 12-1 மணி– சண்முகாநகர் பிரதான சாலை, பகல் 1-2 மணி– ஆர்.சி. பள்ளி அருகே ரேஷன் கடை. வார்டு எண் 54: பிற்பகல் 2-3 மணி– ராமலிங்கநகர் முதல் சாலை அஞ்சலகம் அருகில், பிற்பகல் 3-4 மணி– அகமது காலனி வடக்கு முத்துராஜா தெரு சந்திப்பு, மாலை 4-5 மணி– புத்தூர் அக்ரஹாரம் மந்தை அருகில்.
செப். 22 (புதன்கிழமை): வார்டு எண் 41: காலை 10-10.30 மணி– மின்நகர் குடியிருப்போர் நலச் சங்கக் கட்டடம் அருகில், காஜாநகர். காலை 10.30-11 மணி– ஜெகன்மாதா தேவாலயம் அருகில் கேகே நகர் பிரதான சாலை. முற்பகல் 11-11.30 மணி– ரங்காநகர், இந்தியன் வங்கி அருகில். முற்பகல் 11.30-12 மணி– காலனி பிரதான சாலை, ராக்போர்ட் மசாலா அருகில். பகல் 12-12.30 மணி– அன்புநகர் பிள்ளையார் கோயில் அருகில். பகல் 12.30-2 மணி– மதுரை பிரதான சாலை, மாமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்.
வார்டு எண் 45: பிற்பகல் 2-3 மணி– ஆர்எம்எஸ் காலனி படிப்பகம், கருமண்டபம். பிற்பகல் 3-3.30 மணி– சக்திநகர் ராஜராஜேசுவரி கோயில் அருகில். பிற்பகல் 3.30-4 மணி– கல்யாணசுந்தரம் நகர், ஐஓபி அருகில். மாலை 4-4.30 மணி– பொன்னகர் தொடக்கப் பள்ளி. மாலை 4.30-5 மணி– ஏஜி சர்ச் அருகில்.
செப். 23 (வியாழக்கிழமை): வார்டு 55: காலை 10-11 மணி– குறத்தெரு சந்திப்பு. முற்பகல் 11-11.30 மணி– பாளையம்பஜார் விக்னேஷ் குடியிருப்பு அருகில். வார்டு 56: முற்பகல் 11.30-12.30 மணி– தில்லைநகர் 1,5,10 குறுக்குச் சாலை, பகல் 12.30-1 மணி– பிரதான சாலை தில்லைநகர், பகல் 1-2 மணி– சாமிநாத சாஸ்திரி சாலை.
வார்டு 57: பிற்பகல் 2-3 மணி– திருச்சி டவர், சாலைரோடு, எம்ஏஎம் குடியிருப்பு, பிற்பகல் 3-3.30 மணி– விக்னேஷ் எம்பையர் சாலைரோடு. பிற்பகல் 3.30-4 மணி– சாலைரோடு, ருக்மணி பேருந்து நிறுத்தம். மாலை 4-4.30 மணி– பாலாஜி குடியிருப்பு, சிவசக்தி, கங்கா, யமுனா, காவேரி இமேஜ். மாலை 4.30-5 மணி– விக்னேஷ் பிளாசா.
செப். 24 (வெள்ளிக்கிழமை): வார்டு 49: காலை 10-11 மணி– காயிதே மில்லத் நகர். காலை 11-12 மணி– காஜா தோப்பு. வார்டு 50: பகல் 12-12.30 மணி– அண்ணாநகர். பகல் 12.30-1 மணி– விசுவநாதபுரம். பகல் 1-1.30 மணி– சேஷபுரம். பகல் 1.30-2 மணி– விநாயகபுரம். பிற்பகல் 2-3 மணி– தென்னூர் ஹைரோடு. வார்டு 51: பிற்பகல் 3-4 மணி– ஜெனரல் பஜார் சாலை, பிற்பகல் 4-5 மணி– மூலைக்கொல்லைத் தெரு.
செப். 25 (சனிக்கிழமை): வார்டு 40: காலை 10-11 மணி– எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி மருந்தகம் அருகில். முற்பகல் 11-12 மணி– ஆர்எம்எஸ் காலனி மாநகராட்சி அலுவலகம் அருகில். முற்பகல் 12-1 மணி– விஸ்வாஸ் நகர், கருமண்டபம்.