தினமணி 12.02.2014
யானைக்கால் கொசு ஒழிப்புப் பணி
தருமபுரி நகராட்சிப் பகுதிகளில் யானைக்கால் கொசு ஒழிப்புப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகராட்சியின்
32, 33-ஆவது வார்டுகளில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் விஜயலட்சுமி
தலைமையில் இளநிலை பூச்சியியல் வல்லுநர் சேகர், வட்டார சுகாதார
மேற்பார்வையாளர் ஜம்புலிங்கம், நகராட்சி சுகாதார அலுவலர் முனிராஜ்
உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று கொசுமருந்து தெளித்தல் பணிகளைச் செய்தனர்.
அதேபோல, யானைக்கால் நோய் கண்டறிய கணக்கெடுப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.